மியன்மாரில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்!

#SriLanka #Arrest #Fisherman #Fish
Mayoorikka
2 years ago
மியன்மாரில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 5 மீனவர்கள் மியன்மார் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற ஐவரே கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில்   கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற 'தரு ரஷ்மி' எனும் மீன்பிடி படகு மியன்மார் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இந்த விடயம் தொடர்பான தகவல்களை கோரி மியன்மாருக்கு தகவலொன்று அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது.

எனினும், இதுவரையில் எவ்வித தகவல்களும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என கடற்படை குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!