முட்டையை அதிக விலைக்கு விற்ற கடையொன்றின் உரிமையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்!
#SriLanka
#Sri Lanka President
#Egg
#prices
#Police
Mayoorikka
2 years ago

ஹம்பாந்தோட்ட மாவட்டம் தனமல்வில பிரதேசத்தில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனமல்வில நகரில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாடிக்கையாளர் சேவை அதிகாரசபையின் அதிகாரிகள், குறித்த கடையின் உரிமையாளருக்கு எதிராக வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



