7 மணி நேர பொலிஸ் சோதனையில் 285 சந்தேக நபர்கள் கைது
#Arrest
#Police
Prathees
2 years ago

இன்று காலை 05:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை 7 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 285 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ்இ பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவம் மற்றும் விமானப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 01 கிலோ ஹெரோயின் மற்றும் 01 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.



