புல்மோட்டையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் மரணம்
#Trincomalee
#Murder
#Police
Prathees
2 years ago

புல்மோட்டை நீர் பொப்பகர பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
காணி தகராறு காரணமாக மோதல் ஏற்பட்டதாகவும் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இருவரும் 41 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்முடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



