நீர் கட்டணம் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
#SriLanka
#water
Prabha Praneetha
2 years ago

நீர் கட்டணத்தைச் செலுத்தி நீர் துண்டிப்பைத் தவிர்க்குமாறு வாடிக்கையாளர்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ். பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குழாய் வழி நீர் இணைப்பை பெற்றுள்ள பொது மக்கள், தங்களின் மாதாந்த நீர்க் கட்டணப் பட்டியலை ஒரு மாத்திற்கு மேல் செலுத்தாது இருப்பின் அவர்கள் உடனடியாக கட்டணத்தை செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தவறும் வாடிக்கையாளர்களின் நீர் இணைப்பை துண்டிப்பதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.



