இரண்டு புதிய அமைச்சு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
#Ministry of Education
#service
Prabha Praneetha
2 years ago

இரண்டு அமைச்சுகளுக்கு இரண்டு புதிய செயலாளர்கள் நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டது.
இதன்படி, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக டபிள்யூ.ஏ.சூலானந்த பெரேரா மூன்று மாத காலத்திற்கும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஆர்.எம்.டபிள்யூ.எஸ்.சமரதிவாகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 52(1) பிரிவின் பிரகாரம் 2023 ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன.



