கோட் டி ஐவரி குடியரசின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

Kanimoli
2 years ago
கோட் டி ஐவரி குடியரசின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

கோட் டி ஐவரி குடியரசின் பிரதிநிதிகள் குழு ஒன்று ஜனவரி 31 முதல் பெப்ரவரி 7 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடனான ஆபிரிக்க தூதரகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.

அத்துடன் சுதந்திர தின கொண்டாட்டங்களிலும் பங்கேற்கவுள்ளது.

இலங்கைக்கும் கோட் டி ஐவரிக்குமிடையில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த பிரதிநிதிகள் வர்த்தக சந்திப்புகளை நடத்துவார்கள்.

கோட் டி ஐவரி குடியரசு என்பது கினியா, லைபீரியா, மாலி, புர்கினா பாசோ மற்றும் கானா ஆகிய நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள ஒரு மேற்கு ஆப்பிரிக்க நாடாகும்.

கோட் டி ஐவரி என்பது பிரெஞ்சு மொழி பேசும் மேற்கு ஆப்பிரிக்காவின் பொருளாதாரத்தின் அதிகார மையமாகவும் அமைந்துள்ளது.

இதேவேளை சுமார் 15 மேற்கு ஆப்பிரிக்க நாடுகள். 2021 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 7.4வீத வளர்ச்சியை பதிவுசெய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!