சுதந்திரக் தினக் கொண்டாட்டங்களுக்கு ஜனாதிபதியின் நிபந்தனை
#Ranil wickremesinghe
#Sri Lanka President
#Independence
Prathees
2 years ago
75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு தேவையான செலவுகளை மதிப்பீடு செய்து உண்மையில் செலவு செய்வதில் நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து தரப்பினருக்கும் இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
அரசியல் அதிகாரம் மற்றும் அதிகாரிகள் அதற்கேற்ப செலவுகளை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
குறைந்த செலவில் சுதந்திர தினத்தை பிரமாண்டமாகவும் பெருமையாகவும் ஆக்குவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது இடம்பெற்றுள்ளது.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.