காணாமல் போன பெஜிரோ வெளிமடையில் சிக்கியது

நுவரெலியா - ஹற்றன் நஷனல் வங்கி முன்பாக குயின் எலிசபெத் பிரதான வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெஜீரோ வாகனமொன்று, இனந்தெரியாதவர்களினால் கடத்தி செல்லப்பட்ட நிலையில், CCTV காணொளியின் உதவியுடன் பொலிஸார் வாகனத்தை மீட்டுள்ளனர்.
வாகனம் காணாமல் போனமைத் தொடர்பில், இந்த மாதம் 17ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மற்றும் குற்றப்பிரிவினர் இணைந்து திருடப்பட்ட பெஜிரோ ரக வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டதுடன், நகரிலுள்ள CCTVக்களையும் சோதனை செய்தனர்.
மேலும் சிலர் குறித்த வாகனத்தை வெளிமடை -நுகத்தலாவ பிரதேசத்தில் கண்டதாக தெரிவித்தையடுத்து, அப்பிரதேசத்திற்கு சென்ற பொலிஸார், குறித்த வாகனம் வாகனம் பழுது பார்க்கும் கடைக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்டுள்ளனர்.
குறித்த வாகனத்தை நேற்று கண்டுபிடித்த பொலிஸார், சந்தேகத்தின் பெயரில் பெண்ணொருவரைக் கைதுசெய்துள்ளனர்.



