இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு -மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

#SriLanka #sri lanka tamil news #Lanka4 #Health #people #Warning
Nila
2 years ago
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு -மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதினால் காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் 640 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 625 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹாவில் 412 பேரும், கல்முனையில் 369 பேரும், யாழ்ப்பாணத்தில் 343 பேரும் பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!