தொலைபேசிகளுக்கு வரும் சாரதி அனுமதிப் பத்திரம்!
#SriLanka
#Lanka4
Prabha Praneetha
2 years ago
இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதில் புதிய முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தொலைபேசிகளின் ஊடாக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் முறை வகுக்கப்படும்.
இந்த வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகிறது.