மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் சில்வாவை சுட்டுக் கொலை செய்த நபர் 4வருடங்களின் பின்னர் கைது
#SriLanka
#Murder
#Arrest
#sri lanka tamil news
#Lanka4
Prasu
2 years ago

தெஹிவளை - கல்கிஸை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் சில்வாவை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ஒருவர் நான்கு வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்மலானை ஞானேந்திரா வீதியைச் சேர்ந்த "புலி" என அழைக்கப்படும் ஹெட்டிகொட லியனகே மலிந்து லக்மால் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலையுடன் நேரடியாக தொடர்புடைய இவர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் தங்கியிருப்பதாக கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.



