இன்றைய வேத வசனம் 26.01.2023:பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். நீதிமொழிகள் 22:6
1960களில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி தொடர் ஒன்றின் கதாநாயகனைப் பார்த்து, ஒருவர் தன்னுடைய மகனை அவனுடைய வாழ்க்கையை சுய வழிகளில் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கொடுப்பதாக சொல்லுகிறார்.
அதற்கு கதாநாயகன், இளைஞர்களை அவர்கள் போக்குக்கு விட்டுவிடக்கூடாது என்று பதிலளிக்கிறான். அவர்கள் தங்கள் கண்களுக்கு முன்பாக மின்னக்கூடிய முதல் காரியத்தையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அதில் பிரச்சினை இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும் தருவாயில் காலம் கடந்துவிடும். தவறான தேர்ந்தெடுப்புகள் மின்னக்கூடிய பாக்கெட்டுகளில் பார்வையை அதிகம் கவரக்கூடிய வகையில் இருக்கும். அதைத் தெரிந்தெடுப்பவர்களை சரியான பொருட்களின் வெகுகால பயன்பாட்டை சொல்லி புரியவைப்பது கடினம். ஆகையால் சரியான பழக்கவழக்கங்களை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து “சோதனையை மேற்கொள்ள செய்வது” மிகவும் முக்கியமானது என்று அவர் சொல்லி முடிக்கிறார்.
இந்த கதாநாயகனுடைய வார்த்தைகள் நீதிமொழிகளின் ஞானத்திற்கு ஒத்திருக்கிறது: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (22:6). நம்மில் பலர் இந்த வசனத்தை தேவனுடைய வாக்குத்தத்தமாய் கருதலாம்.
ஆனால் அவை நல்வழிப்படுத்தும் ஆலோசனைகள். நாமெல்லாரும் சுயமாய் தீர்மானம் எடுத்து இயேசுவை பின்பற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவனையும் வேதத்தையும் நேசிப்பதன் மூலம் அதற்கான அஸ்திபாரத்தைப் போடமுடியும்.
நம்முடைய பாதுகாப்பில் இருக்கும் சிறுபிள்ளைகள் நாளை வளரும்போது, இயேசுவை தம்முடைய வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு, “மாறுபாடுள்ளவனுடைய வழியிலே” (வச. 5) நடவாமல், அவருடைய வழியிலே நடப்பர்.
கண்களுக்கு முன்பாக மின்னக்கூடிய காரியங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் நம்மை விலக்கி, உறுதியான சாட்சியாய் நிறுத்துகிறார். கிறிஸ்துவின் ஆவி நம்முடைய சோதனைகளை மேற்கொள்ளச் செய்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியான ஜீவியமாய் நம்முடைய ஜீவியத்தை மாற்றுகிறது.