உயர்தரப் பரீட்சை முடியும்வரை மின்வெட்டு இல்லை

#power cuts #exam
Prathees
2 years ago
உயர்தரப் பரீட்சை  முடியும்வரை மின்வெட்டு இல்லை

இன்று (25) முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை  க.பொ.த உயர்தரப் பரீட்சை முடியும் மின்சாரத்தை துண்டிப்பதில்லை என இணக்கம் காணப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே அது இடம்பெற்றுள்ளது.

உயர்தரப் பரீட்சை காலத்தில் எவ்வித வெட்டுமின்றி மின்சாரம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக இன்று (25ஆம் திகதி) காலை மின்சார அமைச்சு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபை அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்திருந்தது.

இதேவேளை, இன்று (25) பிற்பகல் 4 மணியளவில், இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினரை மீண்டும் அழைத்து கலந்துரையாடுவதற்கு தீர்மானித்ததாகவும், அதற்கமைவாக உயர்தரப் பரீட்சை முடியும் வரை வெட்டுக்களை மேற்கொள்ள வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!