வெலிக்கடை சிறைச்சாலையில் பாலியல் துஷ்பிரயோகம்

#Prison #Sexual Abuse #Welikada
Prathees
2 years ago
வெலிக்கடை சிறைச்சாலையில் பாலியல் துஷ்பிரயோகம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் நேற்று பிற்பகல் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள மற்றுமொரு கைதிக்கு பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான கைதி தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கடை சிறைச்சாலையின் எல் வார்டில் உள்ள கழிவறையில் ஊழல் செய்த குற்றச்சாட்டில் 6 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதியை கொலைச் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் பொரளை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

29 வயதான கைதி உடல் தேவைக்காக கழிவறைக்குச் சென்றபோது, ​​52 வயதான கைதி ஒருவர் அதற்குள் நுழைந்து, 29 வயது கைதியின் வாயை மூடிக்கொண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

45 வயதுடைய கைதி ஒருவரின் வாக்குமூலங்களையும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கைதிகள் மற்றும் துஷ்பிரயோகம் செய்த கைதிகளின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளதாக இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!