கடன் மறுசீரமைப்பு குறித்து வெளிப்படுத்திய மத்திய வங்கி ஆளுநர்
#Central Bank
#SriLanka
Prathees
2 years ago

நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் நிறைவு செய்ய இலங்கை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியா ஏற்கனவே ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ள நிலையில், கடன் மறுசீரமைப்புத் திட்டம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி அல்லது எக்ஸிம் வங்கி தனது கடனை செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதாக கடிதம் மூலம் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனுதவியை பெற்றுக் கொள்வதற்கு சீனா இலங்கைக்கு ஆதரவளித்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது.



