ஜப்பான் அரசாங்கத்தினால் சிறுவர்களுக்காக வழங்கப்பட்ட குளிரூட்டப்பட்ட அறைகள்!
#SriLanka
#Sri Lanka President
#Japan
Mayoorikka
2 years ago
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட walk-in cold rooms எனும் குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் போசாக்கு வழங்கல்கள் சுகாதார அமைச்சிற்கு இன்று கையளிக்கப்பட்டன.
இவ்வாறு கையளிக்கப்பட்ட உபகரணத்தொகுதிகளில் 13 குளிரூட்டப்பட்ட அறைகள், அதாவது அதிவெப்பநிலை உணர்திறனுடைய தடுப்பூசிகளை பாதுகாப்பாக அதிகளவில் வைத்திருக்க முடியுமான பெரிய குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கின்றன.
இவை சிறுவர்களின் நலனுக்காக பயன்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவை கொழும்பு மாவட்டத்திலும், பிராந்திய மருத்துவ வழங்கல் கிளைகளான கம்பஹா, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை, அநுராதபுரம், இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.