மின்சார கட்டணம் தொடர்பில் புதிய தீர்மானம்
#SriLanka
#power cuts
#Lanka4
Prabha Praneetha
2 years ago

உத்தேச மின்சார கட்டண திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணமானது 2009 ஆம் ஆண்டுக்கான மின்சார சட்டத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் என ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
அமைச்சரவையின் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சட்ட ஆலோசனையைப் பெறவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.



