நெல் கொள்வனவு குறித்து நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை வெளியிட்ட தகவல்!
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
2 years ago
இந்த பருவத்தில் 03 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 60,000 மெற்றிக் தொன் அரிசியை அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இயற்கை உரங்களினால் நெற்செய்கைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.