கல்முனை மாநகர சபைக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு நீடிப்பு
#Kalmunai
#Election
#Court Order
Prathees
2 years ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கல்முனை மாநகர சபையின் சார்பில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை வழக்கு விசாரணை முடியும் வரை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது.
சைதாமருது பகுதியைச் சேர்ந்த பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரான ஏ.எல்.சலீம் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதி ஏ.ஆர்.எம்.ஆசிம் ஆகியோர் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவை பிறப்பித்துள்ளது.