நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசை- புதிய ஆண்டிலும் மாற்றம் ஏற்படாதா ? வேதனையில் மக்கள் !!
-1.jpg)
நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்படஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டண உயர்வை அதிகரிக்காவிட்டால், நிச்சயமாக நீண்ட மின்வெட்டு ஏற்படும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.
, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.
மேலும் , மின்சார உற்பத்திக்காக கொள்வனவு செய்யப்படும் எரிபொருளுக்கான கட்டணத்தை மின்சபை செலுத்தாவிட்டால் நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான தொகை தற்போது பெற்றோலிய சட்ட கூட்டுத்தாபனத்திடம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



