போதைப்பொருள் வாங்குவதற்காக பணத்தை திரட்டும் வகையில் 5 வயதான சிறுவனைச் சுமந்து பிச்சை எடுத்த பெண்
#SriLanka
#drugs
#Women
#Arrest
Prasu
2 years ago

போதைப்பொருள் வாங்குவதற்காக பணத்தை திரட்டும் வகையில் 5 வயதான சிறுவனைச் சுமந்தவாறு பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் பிச்சையெடுத்ததாகக் கூறப்படும் 35 வயதுடைய பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் குழுவினர் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் களுபோவில போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர் பல்வேறு வகையான போதைப்பொருட்களுக்கு கடுமையாக அடிமையானவர் என மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



