வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள செயல்

#SriLanka #Airport #Corona Virus #Covid Vaccine #Tourist #லங்கா4 #இலங்கை
Nila
2 years ago
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு  கட்டாயமாக்கப்பட்டுள்ள செயல்

இலங்கை வரும் அனைத்து பயணிகளுக்கும், கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார்.

தடுப்பூசி போடாத சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட PCR அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 
புதிய கொவிட் 19 நெறிமுறை மற்றும் நடைமுறைகள் தொடர்பில் சுற்றுலா அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.   
 
இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கையில் எந்தவொரு நாட்டிற்கும் சலுகைளும் பாகுபாடுகளும் இருக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 
சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களால் வழிநடத்தப்படும் நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன.
 
சுற்றுலா பயணிகள் இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, கொரோனா தொடர்பான எந்தவொரு புதிய முன்னேற்றங்களையும் உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!