அமைச்சர் மகிந்த அமரவீர தனது வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு பதவியிலிருந்து ராஜினாமா
#SriLanka
#Minister
#Resign
Prasu
2 years ago
விவசாயம், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் தனது வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
எனினும் விவசாயத்துறை அமைச்சராக அவர் தொடர்ந்து செயல்படுவார்.
ஜனாதிபதி ஒருவரை அந்த பதவிக்கு நியமிப்பதற்காக ஒரு அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று மேலும் பல அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சர் அமரவீரவின் இராஜினாமா இடம்பெற்றுள்ளது.



