உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகிய 65 வயதுடைய பெண் வெட்டி கொலை
#SriLanka
#Election
#Women
#Murder
Prasu
2 years ago

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகியதாக கூறப்படும் 65 வயதுடைய பெண் ஒருவர் மினுவாங்கொடையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மினுவாங்கொட யாகொடமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வந்தமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



