இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கைக்கு விஜயம்!
#SriLanka
#India
#Colombo
#Meeting
#Airport
Mayoorikka
2 years ago

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று(19) இலங்கை வருகிறார்.
இவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் தமிழ்த்தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும் விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் இரண்டு முக்கிய கடல்சார் அண்டைய நாடுகளான இலங்கை மற்றும் மாலைத்தீவுடன் இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே இந்த விஜயம் அமைய உள்ளது.
குறிப்பாக இலங்கை, இந்தியாவிடமிருந்து கடன் மறுசீரமைப்பை எதிர்பார்த்துள்ள இந்த தருணத்தில் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கொழும்பு வருகிறார்.



