தேசிய கூட்டுப் பொறிமுறை’ ஊடாக 174 மில்லியன் ரூபாய் பெறுமதியான பால்மா
Prabha Praneetha
2 years ago

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70 ஆயிரம் குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய கூட்டுப் பொறிமுறை’ ஊடாக 174 மில்லியன் ரூபாய் பெறுமதியான பால்மாவை பெற்றுக் கொடுக்க பொன்டெரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நியுசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் (Michael Appleton) உள்ளிட்ட அதிகாரிகள் இப்பால்மாவை நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வமாக கையளித்தனர்.



