இன்றைய வேத வசனம் 19.01.2023: இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்

இன்று ஆண்கள் பலர் போதைக்கு அடிமை. போதை நல்வழி காட்டுமா?
பெண்கள் பலர் makeup - க்கும் TV serial - க்கும் அடிமை. Actresses நமக்கு பரலோகத்தையும், makeup kits பரிசுத்தத்தையும் கொடுக்க முடியுமா?
வாலிபர்கள் Mobile - க்கு அடிமை. Fb, Insta Followers - களால் நம் பெயரை ஜீவ புத்தகத்தில் எழுத முடியுமா?
இருளான பாவம் நிறைந்த உலகத்திலிருந்து நம்மை மீட்டுக் கொண்டு வந்தார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து! ஆனால் நாம் வெளிச்சமான தேவ பிரசன்னத்தில் இருந்து விலகி, இருளான பாவ வாழ்க்கைக்குள் செல்லுகிறோம்!
எல்லோரும் எல்லாத்துக்கும் அடிமை ஆனால் அந்த அடிமைத்தனம் தேவனுக்கு தகுதியாயிராதே. தேவனுக்கு மகிமையில்லையே!
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு என்று படிக்கிறோம்! ஆனால் எல்லாம் தகுதியாய் இராது என்று படித்தும் அதை மறக்கிறோம்!
உலகத்திற்கு முன்பாக கிறிஸ்தவனாக காட்டுகிறோம்! ஆனால், உள்ளான மனுஷன ஆராய்ந்து பார்த்தால், தேவன் சொன்ன பரிசுத்தத்தை இழந்து தவிக்கிறோம்!
கிறிஸ்தவன் என்று சொல்வதற்கு பெருமைப்படுகிறோம். ஆனால், கிறிஸ்துவை பிறர்க்கு அறிவிக்க வெட்கப்படுகிறோம்!
உலகத்திற்கு தேவ வசனத்தை கொண்டு செல்லுகிற காலமிது. ஆனால் நாம் வேத வசனத்திற்குள் உலகத்தை கொண்டு வருகிறோம்!
உள்ளான மனுஷனை குறித்தான கவலை இல்லை! புறம்பான மனுஷனை குறித்தானா பெருமைக்கு அப்பப்பா! அளவே இல்லை.
பாவ அடிமை வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வை! உலகபிரகாரமாண வாழ்க்கைக்கு Bye... Bye ... சொல்லு. வாழ்க்கையில் இயேசுவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடு!
அதன்.. பின் சென்று இயேசுவுக்கு சீஷர்களை உருவாக்கு.. பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களுக்கு உதவி செய்வாராக.. ஆமென்!! அல்லேலூயா!!!
ரோமர் 6:19
உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.



