கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்
#Colombo
#GunShoot
#Police
Prathees
2 years ago

கொட்டாஞ்சேனை 6வது ஒழுங்கைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.



