வசந்த முதலி எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில்
#Court Order
#Prison
Prathees
2 years ago

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலியை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
பிணை கோரிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வமான பேச்சுக்கள் இருந்தால், அவற்றை வரும் 24ம் திகதிக்கு முன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.



