எரிபொருள் நிலையங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்: எச்சரிக்கை விடுத்த பெற்றோலிய கூட்டுத்தாபனம்
#SriLanka
#Fuel
#prices
Mayoorikka
2 years ago

QR தொழில்நுட்ப முறைமைக்கமைய சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை விற்பனை செய்யத் தவறியுள்ளதாகவும் அதனை பின்பற்றாத எரிபொருள் நிலையங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.
குறியீட்டு முறைமையைப் பின்பற்றாமை கண்டுபிடிக்கப்பட்டால் எரிபொருள் விநியோகம் மற்றும் அத்தகைய நிரப்பு நிலையங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
QR தொழில்நுட்ப முறைமைக்கமைய சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை விற்பனை செய்யத் தவறியுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.



