தடையில்லா மின்சாரம் – கலந்துரையாடல்கள் ஆரம்பம்!
Prabha Praneetha
2 years ago

உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரத்தினை விநியோகிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மின்சார சபையுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு அமையவே, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது.



