யாழ்ப்பாணத்திற்கான புதிய மாவட்டச் செயலர் நியமனம்! நாளை பதவியேற்பு
#SriLanka
#Sri Lanka President
#Jaffna
#District
Mayoorikka
2 years ago

யாழ்ப்பாண மாவட்டச் செயலராக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலராகப் பணியாற்றிய அ.சிவபாலசுந்தரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதம் இன்று கிடைக்கப்பெறும் நிலையில் அவர் புதன்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்பார் எனவும் அறியமுடிகின்றது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவரது நியமனத்துக்கான அனுமதி வழங்கப்பட் டுள்ளது.
யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய க.மகேசன், கடந்த முதலாம் திகதி முதல் பதவியுயர்வுடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சின் செயலராகப் பொறுப்பேற்றிருந்தார்.
இந்த நிலையில் அ. சிவபாலசுந்தரன், யாழ். மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



