கஞ்சா தொடர்பான குற்றச்சாட்டால் நற்பெயர் மற்றும் நாடாளுமன்றத்தின் கௌரவம் வீணாகிவிட்டது - பிரதி சபாநாயகர் அஜித்
#drugs
#SriLanka
#Parliament
Prasu
2 years ago
தனது காணியில் கஞ்சா செடி பயிரிடுவதாக தேசிய பத்திரிகைகளில் வெளியான தவறான செய்தியால் தனது நற்பெயரையும், நாடாளுமன்றத்தின் கௌரவத்தையும் கெடுத்துள்ளதாக பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
இதன்போது, இந்த விடயத்து எதிராக உரியவர்களை சிறப்புரிமைக் குழுவின் முன் அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் செய்தியை சரிசெய்து சம்பந்தப்பட்ட நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பி பிரதி சபாநாயகர் இதனைக் கோரினார்.



