அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்!

அமைச்சரவையில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் தீர்மானம் ஒன்று தொடர்பில், நாடாளுமன்றில் இன்று வாதவிவாதங்கள் இடம்பெற்றன.
உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவித்தமை தொடர்பிலேயே இந்த வாதவிவாதங்கள் இடம்பெற்றன.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர், முன்வைத்த இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்;த்தன, பதிலளித்தார்.
இதன்போது குறித்த தேர்;தலுக்கான கட்டுப்பணம் பெறலை நிறுத்துமாறு அமைச்சரவை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
எனவேதான், குறித்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத,அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருக்கு மேலதிகமாக, அமைச்சரவையின் செயலாளரும், இந்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டனர்.
எனினும், இந்த தகவலையும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன மறுத்துரைத்தார்.



