முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
#SriLanka
#Bank
#Central Bank
#Court Order
Mayoorikka
2 years ago

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ உரைகளை சமர்ப்பிக்க கப்ரால் தரப்புக்கு பெப்ரவரி 16 வரை நீதிமன்றம் அவகாசம் அளித்தது.
2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது, அஜித் நிவார்ட் கப்ரால் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி இந்த தனிப்பட்ட முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



