பொருளாதார நெருக்கடியையை சமாளிக்க இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட அஜித்தின் உதவியை நாடினார்!

#SriLanka #India #Meeting #Development #economy
Mayoorikka
2 years ago
பொருளாதார நெருக்கடியையை சமாளிக்க இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட அஜித்தின் உதவியை நாடினார்!

பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கை இந்தியாவுடன் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றது.

இந்தநிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் இது பற்றி விவாதிப்பதற்காக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் நேற்று உரையாடியுள்ளார். 

அண்மைகாலமாக இலங்கை கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காகவும், இலங்கையின் கடனை மறு சீரமைப்பது தொடர்பாகவும் அரசாங்கம் தீவிரமாக யோசித்து வருவதுடன், இந்தியாவின் உதவியை நாடி வருகிறது.

அந்தவகையில் இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் நேற்று உரையாடியுள்ளார். 

இரு நாடுகளின் பரஸ்பர உறவை பேணுதல், மீட்டெடுத்தல் மற்றும் ஒத்துழைப்பு வழங்குதல் குறித்து இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாகவும், இது இந்தியா-இலங்கை இடையே நடைபெறும் வழக்கமான உரையாடலின் ஒரு பகுதி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வார இறுதியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஆனால் இந்த பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!