இன்று நள்ளிரவுக்குப் பிறகு உயர்தரப் பயிற்சி வகுப்புகள் நடத்த தடை

#exam
Prathees
2 years ago
இன்று நள்ளிரவுக்குப் பிறகு உயர்தரப் பயிற்சி வகுப்புகள் நடத்த தடை

2022 ஆம் ஆண்டுக்கான அபோசா உயர்தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்வதும் அந்த வகுப்புகளை நடத்துவதும் இன்று (17) நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளது.

பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைக்கான யூக வினாக்கள் அடங்கிய தாள்களை அச்சிட்டு விநியோகிக்கக் கூடாது, மேலும் பரீட்சை தாள்களில் கேள்விகள் வழங்கப்படும் அல்லது அதுபோன்ற கேள்விகள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகளை மின்னணு, அச்சிடப்பட்ட அல்லது சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் தெரியப்படுத்தக்கூடாது.

எந்தவொரு நபரோ, அமைப்போ அல்லது வேறு தரப்பினரோ இந்த உத்தரவுகளை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!