20க்கு 20 போட்டிகளில் இலங்கை அணி முழுத்தோல்வியடைந்த நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கட் கலைக்கப்படலாம்

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20க்கு 20 போட்டிகளில் இலங்கை அணி முழுத்தோல்வியடைந்த நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கட் கலைக்கப்படலாம் என்று இந்திய செய்தி ஒன்று தெரிவிக்கிறது
எதிர்வரும் வாரங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகம் கலைக்கப்படும் என்று இந்திய ஊடகம் குறி;ப்பிட்;டுள்ளது.
முன்னதாக கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்ட 6 பேர் குழு, தமது அறிக்கையை வழங்கிய நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது.
எனினும் இந்த செய்தி தொடர்பாக ஸ்ரீலங்கா கிரிக்கட் கருத்து எதனையும் வெளியிடவில்லை.
இதற்கிடையில், நேற்று திருவனந்தப்புரத்தில் இந்திய அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி பெற்ற மோசமானத் தோல்வி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கட், அணியின் முகாமையாருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.



