இலங்கையில் ஆண்கள் பெண்கள் தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!
#SriLanka
#Ayurvedic
#Health
Mayoorikka
2 years ago
இலங்கையில் மசாஜ் தொடர்பில் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதற்காக பல்வேறு வழிகளில் சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மசாஜ் நிலையங்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியான நோய்கள் பரவலாக பரவி வருவதாலே இந்த சட்டம் இயற்றப்படுவதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.