நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான புதிய முறைமை
#water
#Electricity Bill
Prabha Praneetha
2 years ago
.jpg)
புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நாளை இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நீர் கட்டணத்திற்கான கொடுப்பனவு பட்டியலை வழங்கும் இயந்திரம் மூலம் மாதாந்த கொடுப்பனவு தொகையை வழங்குவதுடன், வங்கி அட்டைகள் மூலம் கொடுப்பனவுகளை செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



