13ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் சில வருடங்களில் முழுமையாக அமுல்படுத்த திட்டம்
#Ranil wickremesinghe
Prabha Praneetha
2 years ago
13ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் சில வருடங்களில் முழுமையாக அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் நேற்று பங்கேற்றார்.
இந்தநிலையில், அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் தீர்வு என்பது வடக்கு மக்களுக்கான பிரச்சினை மாத்திரமல்ல இலங்கையில் உள்ள அனைவரும் இந்த கோரிக்கையினை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.