மொரகஹஹேனேயில் துப்பாக்கிச் சூடு: மர ஆலை உரிமையாளர் படுகாயம்

மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொனபொல கும்புக தெற்கு பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காரில் பயணித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை வடக்கு, ஹொரேதுடுவ கெமுனு மாவத்தையில் வசிக்கும் 36 வயதான மர ஆலை உரிமையாளர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர், காரை ஓட்டி வந்த மர ஆலை உரிமையாளருக்கு சமிக்ஞை செய்து காரை நிறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த இடத்தில் வெற்று வெடிமருந்து உறை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த துப்பாக்கி வியாபாரியின் கழுத்தில் பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பிரதேசவாசிகள் காயமடைந்த நபரை அம்பியூலன்ஸ் மூலம் ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.



