கொம்பனிதெருவில் போதைப்பொருள் விருந்து சுற்றிவளைப்பின் போது இளம் பெண் உட்பட நால்வர் கைது
#SriLanka
#drugs
#Arrest
Prasu
2 years ago
கொம்பனிதெருவில் உள்ள உணவகம் ஒன்றின் 30வது மாடியில் நடத்தப்பட்ட போதைப்பொருள் விருந்தொன்றை சுற்றுவளைத்து இளம் பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (15) அதிகாலை பாணந்துறை, வாலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 1 கிராம் கொக்கைன் போதைப்பொருள், 5 கிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் டான்சின் டெப்லட் எனப்படும் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
முகப்புத்தகம் மூலம் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.



