நீதிமன்றம் உத்தரவிட்ட நட்டஈட்டை எவ்வாறு வழங்குவது: மைத்திரி வெளியிட்ட தகவல்
#Maithripala Sirisena
#Easter Sunday Attack
#Court Order
Prathees
2 years ago

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக உச்ச நீதிமன்றம் விதித்த அபராதத்தை செலுத்துவதற்கு தனது நண்பர்களின் ஆதரவைப் பெறுவேன் என எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது 10 கோடி ரூபா நட்டஈடு வழங்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாக தெரிவித்தார்.



