காணாமல் போன பெண்ணின் சடலம் அளுத்கம ஏரியில் கண்டெடுப்பு

மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன பெண்ணொருவரின் சடலம் இன்று (15) காலை பண்டாரகம மெதகம அளுத்கம ஏரியில் மிதந்ததாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம, வல்மில்ல சந்தி, மைத்திரி மாவத்தையில் வசித்து வந்த 60 வயதுடைய அமிதா பாலசூரிய என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி இரவு அவர் சுகயீனமுற்றிருந்ததாகவும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து காணாமல் போனதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் கண்டெடுக்கப்பட்ட போது பெண்ணின் முகத்தை மிருகங்கள் தின்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



