அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்

#Election
Prathees
2 years ago
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதை இன்று (15) பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உரிய நியமனங்களை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிணைப் பணத்தை சுமார் 20 பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே வைப்பிலிட்டுள்ளன.

பல மாவட்டங்களில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் சில தரப்பினர் பிணைப் பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு சமகி பலவேகவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.முஜிபுர் ரஹ்மானை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!