ஜப்பானுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இலங்கை நிறைவு செய்துள்ளது - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Kanimoli
2 years ago
ஜப்பானுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இலங்கை நிறைவு செய்துள்ளது - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜப்பானுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இலங்கை நிறைவு செய்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் இந்தியாவை தவிர இலங்கை கடன் பெற்றுள்ள மூன்று முக்கிய நாடுகளில் ஜப்பானும் ஒன்று என விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 
ஜப்பான், சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று முக்கிய நாடுகளில் ஒன்றான ஜப்பானுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து விட்டன.
இந்த வாரம் சீனாவுடன் கலந்துரையாடப்பட்டது.
இந்தநிலையில்,இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்து கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாட உள்ளார் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டில், முதல் காலாண்டின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாக விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை வெற்றியடையும் பட்சத்தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மூன்று அல்லது நான்கு தவணைகளில் நிதியைப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!