சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு இலங்கை வருகை!
#SriLanka
#China
Mayoorikka
2 years ago

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள பிரதி அமைச்சர் சென் சோவ், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளார் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென் சோ உட்பட 06 பேர் கொண்ட குழுவொன்று இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
சீனப் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 18ஆம் திகதி வரை இலங்கையில் தங்கவுள்ளனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளநிலையில் அவரின் இலங்கை விஜயத்திற்குத் தேவையான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இவர்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



