மாவனல்லை உள்ளுராட்சி மன்ற தலைவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது
#Arrest
Prathees
2 years ago

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் சமந்த ஸ்டீபன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு மில்லியன் ரூபாவை லஞ்சமாகப் பெறச் செல்லும் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவனல்லை நகரில் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்குவதற்காக சந்தேகத்திற்குரிய தலைவர் இலஞ்சம் பெற முயற்சித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மாவனல்லை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெறுவதற்கு தயாரான மாவனல்லை உள்ளுராட்சி மன்றத் தலைவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.



